உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நாய்கள் கண்காட்சி 

நாய்கள் கண்காட்சி 

புதுச்சேரி : கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி வளாகத்தில் நடந்த கண்காட்சியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த, வெவ்வேறு வகையான 300 நாய்கள் பங்கேற்க செய்யப்பட்டன. காலை 9:00 மணிக்கு துவங்கிய நாய் கண்காட்சி மாலை 6:00 மணி வரை நடந்தது.ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி டீன் செழியன் கண்காட்சி மற்றும் போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் 8 நாய்கள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. கால்நடைத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார். கிளப் செயலாளர் ராயல் டோமினிக், தலைவர் ரங்கநாதன், பொருளாளர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை