உள்ளூர் செய்திகள்

கண்கள் தானம்

திருக்கனுார்: திருக்கனுார் வணிகர் வீதியை சேர்ந்தவர் வசந்தா, 70. இவர், நேற்று காலை உடல்நிலை பாதித்து இறந்தார்.இதையடுத்து, அவரது மருமகள் மஞ்சு, பேரன் நிர்மால் ராஜ், பழனிமற்றும் குடும்பத்தினர், இறந்த வசந்தாவின் கண்களை தானமாக வழங்க முன்வந்தனர்.திருக்கனுார் கோவில் நகரம் லயன் சங்க தலைவர் சங்கீதா செந்தில்வேலன், மாவட்ட தலைவர்கள் செந்தில்வேலன், நடராஜன்,பிரகாஷ், துரை பாக்கியராஜ், செல்வம், நாசிம்ஆகியோர் ஏற்பாட்டில், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு, வசந்தாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !