உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் காங்., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பாவேந்தனர் நகர், சுப்ரமணிய பாரதியார் நகர், ஆனந்தம் நகர் மற்றும் பிச்சவீரன்பேட் பகுதிகளில் மக்கள் நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், இத்தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக மேற்கொண்ட மக்கள் நலத்திட்ட பணிகளை நினைவு கூர்ந்தும், மீண்டும் தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்தால் மேற்கொள்ள உள்ள மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளை எடுத்து கூறியும் 'கை' சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு கொண்டார். பிரசாரத்தின்போது, அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை