உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேலை இல்லாத விரக்தி டிரைவர் தற்கொலை

வேலை இல்லாத விரக்தி டிரைவர் தற்கொலை

புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 27; தனியார் கார் ேஷாரரூமில் டிரைவராக பணிபுரிந்தார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டரை வயதில் மகன் மற்றும் 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சம்பத்குமார் கடந்த 5 மாதங்களுக்கு முன் கார் கம்பெனி வேலையில் இருந்து நின்று விட்டார். அதன்பிறகு எங்கும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனை மனைவி சுஷ்மிதா, அவரது தாய் ஆகியோர் கண்டித்தனர்.நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சம்பத்குமார் சென்றுவிட்டு, இரவு 10:30 மணிக்கு வீடு திரும்பியவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சுஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி