ஓட்டுனர் உரிமம் சிறப்பு முகாம்
புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான ஓட்டுனர், பழகுனர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில், முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் மாணவிகளுக்கான ஓட்டுனர், பழகுனர் பயிற்சி மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் போக்குவரத்து துறை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பிரபாகர் ராவ், ரமேஷ், போக்குவரத்து ஆய்வாளர்கள் புவனேஷ், அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.