மேலும் செய்திகள்
சிறப்பு அங்காடி: எம்.எல்.ஏ., திறப்பு
30-Oct-2024
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், பிரதமரின் 'நவோ டிரோன் சகோதரி' எனப்படும் மகளிர் சுய உதவிக்குழுவினரை கொண்டு, விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் டிரோன்களை இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.திட்ட இயக்குனர் அருண்ராஜன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள், புதுச்சேரி முன்னோடி வங்கி மேலாளர், அரியாங்குப்பம், வில்லியனுார், காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 2024---25ம் நிதியாண்டு 10 டிரோன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுவினரை கொண்டு டிரோன்களை இயக்க சிவில் விமான போக்குவரத்து துறை மூலம் பயிற்சி அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
30-Oct-2024