உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி போலீசில் இ-புகார் பெட்டி செயலி துவக்கம்

புதுச்சேரி போலீசில் இ-புகார் பெட்டி செயலி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி போலீசில் பொதுமக்கள் புகார் மனுக்களை கண்காணிக்கும் இ-புகார் பெட்டி செயலி துவக்கப்பட்டது.புதுச்சேரி போலீசில் பொதுமக்களிடம் இருந்து பெறும் புகார் மனுக்கள், கம்ப்யூட்டர் ஏதும் இன்றி பதிவேடுகளில் மட்டும் பதிவு செய்து வருகின்றனர். இதை நவீன மயமாக்க புதுச்சேரி போலீஸ் துறை, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை நாடியது.பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியர் ஜெயந்தி வழிகாட்டுதலில், இறுதியாண்டு மாணவர்கள் மாதேஸ்வரன், மொகிந்தர், காமேஷ்குமார் ஆகியோர் இ-புகார் பெட்டி என்ற போலீசாருக்கான பிரத்யேக மொபைல் செயலியை உருவாக்கினர்.புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள், இந்த இ-புகார் பெட்டி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிலைய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும். இந்த செயலி முதல் 6 மாத காலத்திற்கு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களால் இலவசமாக பராமரிக்கப்பட உள்ளது.இ-புகார் பெட்டி செயலி துவக்க விழா நேற்று நடந்தது. டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் மோகன், சீனியர்எஸ்.பி., நாரா சைதன்யா, சுவாதிசிங், பேராசிரியர் ஜெயந்தி முன்னிலையில், பல்கலைக் கழக மாணவர்கள் செயலி குறித்து செயல்விளக்கம் அளித்து, துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து இ-ரோந்து (இ-பீட்) செயலி பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை