உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி, மூலகுளம், பிச்சவீரன்பேட் கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் 'மார்க்கதர்ஷன்' திட்டத்தின் கீழ் 2 நாள் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது.புதுச்சேரி பல்கலைக் கழக 'மார்க்கதர்ஷன்' திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பேராசிரியர் பொதுலா சுஜாதா, பேராசிரியர் சத்யா, கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார் மற்றும் இயக்குநர் குமரவேல் பயிற்சியினை துவக்கி வைத்தனர்.இதில், ஆசிரியர்களுக்கு 'விளைவுகள் அடிப்படையிலான கல்வி'வழங்கும் முறை, அதன் அவசியம், தேசிய அங்கீகார வாரியத்தில் அங்கீகாரம் பெறும் முறை, அதன் முக்கியத்துவம் குறித்துப் பயிற்சி வழங்கப்பட்டது.கொச்சின் மற்றும் பெங்களூரு டெக் மகேந்திரா, குலோபல் பயிற்சி தலைவர்ஜவகர் கோவிந்தராஜ், என்.ஐ.டி.டி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப துறை தலைவர் சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.நிறைவாக, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி