உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிகம் மது குடித்த கொத்தனார் சாவு

அதிகம் மது குடித்த கொத்தனார் சாவு

கரிக்கலாம்பாக்கம் அடுத்த செல்லஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம், 59; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர், வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். தவளக்குப்பம் சாராயக்கடை அருகில் நேற்று மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை