உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஸ்கூட்டரில் சென்ற முதியவர் பலி

 ஸ்கூட்டரில் சென்ற முதியவர் பலி

புதுச்சேரி: ஸ்கூட்டரில் சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அரியாங்குப்பம், காக்காயந்தோப்பை சேர்ந்தவர் ஏசுதாஸ், 61; ஆந்திரா தனியார் கல்லுாரியில் ஊழியராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரில், வீராம்பட்டினம் நோக்கி சென்றார். தனியார் விடுதி அருகில் சென்ற போது திடீரென நிலைதடுமாறி கிழே விழுந்தார். அதில் அவருக்கு தலை, மற்றும் கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, தெற்கு பகுதி, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !