உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நனைந்தபடி நடைபாதையில் படுத்திருந்த முதியவர் மீட்பு

நனைந்தபடி நடைபாதையில் படுத்திருந்த முதியவர் மீட்பு

புதுச்சேரி : புதுச்சேரி கனமழையில் நனைந்தபடி நடைப்பாதையில் படுத்திருந்த முதியவரை சாரோன் சொசைட்டி நிர்வாகிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.புதுச்சேரியில் பெய்துவரும் கனமழையில் முதியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில், சாலையோரம் நடைபாதையில் படுத்து அவதிப்பட்டு வருவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அளித்த தகவ லின்பேரில், தொண்டு நிறுவனமான சாரோன் சொசைட்டி நிறுவனர் மோகன், ராஜகுமார் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் வேனுடன் அங்கு சென்று, முதியவரை போலீசார் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குணமடைந்த பின், அவரை குடும்பத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சாரோன் சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை