மேலும் செய்திகள்
கணவர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது
12-Apr-2025
அரியாங்குப்பம்: புதுச்சேரி மாநிலம், என்.ஆர்., நகரை சேர்ந்தவர் பாஸ்கர், 65; இவர், கோவில் திருவிழாக்களில் சாமி வேடமிட்டு குறி சொல்லி வந்தார். மனைவியை பிரிந்து தனியாக வசித்தார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, இவர் தங்கியிருந்த வீட்டு அருகே கிரைண்டர் குழவி கல்லால் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தவளக்குப்பம் போலீசார் விசாரித்தனர். இதில், முதியவருக்கும், அவரது வீட்டு அருகே வசிக்கும் தமிழரசன், 35, என்பவருக்கும் மூன்றாண்டுக்கு முன் ஏற்பட்ட தகராறில், தமிழரசன், முதியவரை கத்தியால் வெட்டியுள்ளார்.இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு, முதியவர் பாரில் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். பின் வீட்டின் அருகே முதியவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சந்தேகத்தில், தமிழரசனை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
12-Apr-2025