உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மெடிக்கலில் சிகிச்சை பெற்ற மூதாட்டி திடீர் சாவு

மெடிக்கலில் சிகிச்சை பெற்ற மூதாட்டி திடீர் சாவு

பாகூர்: பாகூரில் தனியார் மெடிக்கலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மூதாட்டி, இறந்தது குறித்து போலீசார் விசா ரித்து வருகின்றனர். பாகூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம், 48; கொத்தனார். இவரது தாய் விசாலாட்சி, 75; பாகூர் விநாயகர் கோவிலில் சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார். இவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்தது. அதற்காக மருந்து சாப்பிட்டு வந்தார். அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போனால், அருகில் உள்ள தனியார் கிளினிக்கில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு விசாலாட்சிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர், அருகில் உள்ள தனியார் மெடிக்கலுக்கு சென்றார். அங்கு, அவருக்கு ஊசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த அவரது மகன் ஆதிமூலம் அவரை, வீட்டிற்கு அழைத்து சென்றார். அவரது உடல் நிலை மோசமானதால், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். பாகூர் போலீசார் விசாலாட்சி யின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது மகன் ஆதிமூலம் புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாலாட்சியின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை