உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரியாங்குப்பம் பாலத்தில் ரூ. 9 லட்சத்தில் மின் விளக்கு

அரியாங்குப்பம் பாலத்தில் ரூ. 9 லட்சத்தில் மின் விளக்கு

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் பழைய ஆற்று பாலத்தில், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மின் விளக்குகளை, பாஸ்கர் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.அரியாங்குப்பம் பழைய ஆற்று பாலத்தில், மின் விளக்குகள் இல்லாமல் இருண்டு கிடந்தது. இவ்வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர். அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ.,விடம் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.அதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் மின் விளக்கு அமைக்க 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பாலத்தில் புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளை, பாஸ்கர் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். அரியாங்குப்பம் மின்துறை, இளநிலை பொறியாளர் லுார்துராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்துறை ஊழியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை