உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊழியர்கள் போராட்டம் வாபஸ்; பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயங்கியது

ஊழியர்கள் போராட்டம் வாபஸ்; பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயங்கியது

புதுச்சேரி; புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) ஒப்பந்த முறையில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 2 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தர பணியாளர்கள் குறைவு என்பதால் பஸ்கள் ஒடவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் போராட்டக் குழுவினர் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் முதல்வரை சந்தித்து பேசினர்.அப்போது போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கிய பின், தன்னை சந்திக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர். இதனால் நேற்று காலை முதல் வழக்கம் போல் பி.ஆர்.டி.சி.,பஸ்கள் இயங்கியது. போராட்ட குழுவினர் முதல்வரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை