உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி : புதுச்சேரி - திண்டிவனம் பிரதான சாலை, கோரிமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனங்கள், தள்ளு வண்டி, பங்க் கடை அமைத்து வியாபாரம் செய்வது தொடர்ந்து, அதி கரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்துகள் ஏற்படு வதுதாக உழவர்கரை நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் தலைமையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொதுப்பணித் துறை, காவல் துறையுடன் இணைந்து கோரிமேடு- திண்டிவனம் பிரதான சாலை யில் புதுச்சேரி எல்லை முதல் ஞானதியாகு நகர் வரை சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்க்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த பங்க் கடைகள், சாலையோர கடைகளை, அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றபட்ட இடத்தை தொ டர்ந்து பாதுகாக்க ஜிப்மர் நிர்வாகத்திடம் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !