பொறியியல் கல்லுாரி கலந்தாய்வு
புதுச்சேரி, : பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமான் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்டாக் மூலம் பொறியியல் கல்லுாரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்த பி.டெக்., படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.இதற்காக விண்ணப்பித்தவர்கள் கல்லுாரி மற்றும் பாடப் பிரிவுகளை நாளை 21ம் தேதி காலை 11:00 மணிக்குள் தேர்வு செய்ய சென்டாக் அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்களும் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.சென்டாக் மூலம் முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான (எம்.டி.எஸ்.) சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் இடம் கிடைக்கப்பெற்றவர்கள் சேர்க்கை ஆணையை சென்டாக் இணையதளததிலிருந்து இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவர்கள் வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.