தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி
புதுச்சேரி: தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவ, மாணவிகளுக்கு இரண்டு நாள் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி ஆங்கில துறை தலைவர் அருளரசி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். பேராசிரியர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஏ.ஐ.சி., குழும தலைமை செயற்குழு இயக்குநர் விஷ்ணு பிரசாத் சிறப்புரையாற்றினார். கல்லுாரி வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் நாராயணன் கருத்துரை வழங்கினார். முகாமில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். உதவி பேராசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.