உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ.சி., இ.பி.எப்.ஓ., விழிப்புணர்வு முகாம்

இ.எஸ்.ஐ.சி., இ.பி.எப்.ஓ., விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு மற்றும் குறை தீர்ப்பு கூட்டம் வரும், 27ம் தேதி நடக்கிறது. புதுச்சேரியில், மண்ணடிப்பட்டு கொம்யூன், திருபுவனை கிராமத்தில், சம்வர்தனா மதர்சன் இன்னோவேடிவ் சொல்யூஷன் லிட்., நிறுவனத்தில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.காரைக்காலில்,கோட்டுச்சேரி பகுதி, வினாயகா மிஷன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முகாம் நடக்கிறது.தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர், இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ., சம்மந்தம் உள்ள கோரிக்கைகள் இருந்தால் முகாமில் பங்கேற்கலாம்.கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும் என, மண்டல அலுவலக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி