உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காதலர்களிடம் போலீஸ் பணம் பறிப்பு? காரைக்காலில் பரபரப்பு

காதலர்களிடம் போலீஸ் பணம் பறிப்பு? காரைக்காலில் பரபரப்பு

காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் காதல் ஜோடியிடம் போலீஸ் பணம் கேட்டு மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.காரைக்கால் மாவட்ட கடற்கரைக்கு தினசரி ஏராளமான காதல் ஜோடிகள் வருகின்றனர். அவர்களை போலீசார் மிரட்டி, பணம், நகைகளை பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. சில போலீசார் காதல் ஜோடிகளின் மொபைல் போன்கறை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு, பெற்றோர்களிடம் தெரிவிப்பதாக மிரட்டுவதாக காதலர்கள் புகார் கூறுகின்றனர். இதனிடையே கடலோர காவல்படை போலீசார் ஒருவர், கடற்கரைக்கு வந்த காதல் ஜோடியை அழைத்து, பணம் கேட்டு மிரட்டியதுடன், காதலனுடன் வந்த பெண்ணிடம் தவறாக பேசியுள்ளார். இதனையறிந்த அங்கிருந்த பொது மக்கள் அந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை