உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கண் தான விருதுகள் வழங்கும் விழா

 கண் தான விருதுகள் வழங்கும் விழா

புதுச்சேரி: தவளக்குப்பம், அரவிந்தர் கண் மருத்துவமனையில் 41 வது தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழாவையொட்டி, கண் தான விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி ஆனந்தன் பங்கேற்று, அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலில் புதுச்சேரியில் கண்களை அதிக அளவில் தானம் பெற்று கொடுத்த பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை தலைவர் சக்திவேலுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து, அரசு மருத்துவ துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் தலைமை நிர்வாகிகள், பன்னாட்டு மனித உரிமைகள் பேரவையின் ரத்த தானம், உடல் உறுப்பு தானம், கண் மற்றும் உடல்தானம் பதிவு ஆலோசனைக் குழுக்கள், அணியின் அமைப்பாளர்கள், மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை