உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கிகளின் பெயரில் போலி லிங்க் : சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

வங்கிகளின் பெயரில் போலி லிங்க் : சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: வாட்ஸ் ஆப் குழுக்களில் வங்கிகளின் பெயரில் வரும் போலி லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பு:வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது எஸ்.பி.ஐ., - சி.யு.பி., - ஐ.சி.ஐ.சி.ஐ., - ஆக்சிஸ், - எச்.டி.எப்.சி., வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.இதை யாரும் நம்ப வேண்டாம். அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் ஹேக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர்.உங்களின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்படும். சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம்.பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.மேலும், இணைய வழி சம்மந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413-2276144, 94892 05246 எண்கள் மூலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !