விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
நெட்டப்பாக்கம் : புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கல்மண்டபம் அய்யனாரப்பன் கோவில் வளாகத்தில் நடந்தது. குழு தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணைத் தலைவர் பாஸ்கரன், துணை செயலாளர் ஆதிமூலம், செயலாளர்கள் விஜயன், ஜெயகோபி, முத்துரா மன், ஆறுமுகம், நடராஜன், பத்மநாபன், பார்த்தசாரதி, அனந்தராமன், ராமச்சந்திரன், அருள்ராஜ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுச்சேரி வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் நெல் விதைகள், பசுந்தால் உரங்களை, அந்தந்த உழவர் உதவியகத்தில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறந்து கரும்பு விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து, விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.