உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொர்ணவாரி பட்டத்தில் காப்பீடு செய்து பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு

சொர்ணவாரி பட்டத்தில் காப்பீடு செய்து பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுச்சேரி : சொர்ணவாரி பட்டத்திற்கு பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து, விவசாயிகள் பயனடைய வேண்டும்.வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு:இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விண்ணப்பத்துடன், உரிய ஆவனங்களை இணைத்து, அந்தெந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் சொர்ணவாரி விதை விதைப்பு சான்றிதழ் பெறவும். பின், தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், விவசாயிகள் தங்கள் காப்பீடு செய்த பயிர் விவரம், நில அளவு போன்ற விவரங்களை நேரடியாக சரிபார்த்து கொள்ள முடியும். பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு செய்யும் போது, ஆதார் எண்ணுடன், மொபைல் எண்ணை கொடுத்து, ஓ.டி.பி., எண் மூலம் பொது சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்து கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி