உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தந்தை மாயம் : மகன் புகார்

 தந்தை மாயம் : மகன் புகார்

வானுார்: வேலைக்கு சென்ற தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் ஜெயகோபால், 50; இவர் தமிழக பகுதியான வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள தனியார் கெஸ்ட் அவுசில் இரு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமிழரசன், வங்கியில் லோன் பெறுவதற்காக தனது தந்தையிடம் வீட்டு மனையை தன் பெயரில் எழுதி வைக்கும் படி கேட்டுள்ளார். அதில் இருந்து ஜெயகோபால், மகன் மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயகோபால், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. தமிழரசன் புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை