மேலும் செய்திகள்
வேலைநிறுத்த போராட்டம்: ஜாக்டோ - ஜியோ பங்கேற்பு
07-Jul-2025
புதுச்சேரி: 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வரும் 9ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டும் என அறிவித்துள்ளனர்.இதுகுறித்து சம்மேளன் பொது செயலாளர் முனுசாமி விடுத்துள்ள அறிக்கை;அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஆகியவை இணைந்து வரும் 9ம் தேதி வேலைநிறுத்த பேராட்டத்தித்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் சுதேசி பஞ்சாலை எதிரில் வரும் 9 ம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், 8 வது ஊதியக் குழுவிற்கு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். மின்சார திருத்த சட்டம் 2022 திரும்ப பெற வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டம் நடத்தப்படவுள்ளது.
07-Jul-2025