உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சேரி : வியாபாரத்தில் நஷ்டம், மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என, மன உளைச்சலில், பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பழனி மனைவி காமாட்சி, 50. பழனி கடந்த 2020ம் ஆண்டு இறந்த நிலையில், காமாட்சி, உடையார் தோட்டத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால்,பணம் இல்லாமல் கடையை நடத்த முடியாமல் அவதிப்பட்டார். தனது மகளுக்கு திருமணம் செய்ய முடியாமல், இருந்ததால், மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு மொட்டை மாடியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை