உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மின் கசிவால் தீ விபத்து

 மின் கசிவால் தீ விபத்து

புதுச்சேரி: மின் கசிவால் பூட்டிய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. வாணரப்பேட்டை, ஜெயராம் செட்டியார் தோட்டம், 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜி. இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று காலை 8:00 மணியளவில் அவரது வீட்டில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் முன்னணி தீயணைப்பு வீரர் கணேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பார்த்தபோது டிவி மற்றும் அதன் அருகில் இருந்த டேபிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அதை அணைத்தனர். டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 'டிவி' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் முற்றிலும் எரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை