உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பத்திர எழுத்தர் அலுவலகத்தில் தீ விபத்து 

பத்திர எழுத்தர் அலுவலகத்தில் தீ விபத்து 

பாகூர்: பாகூரில் பத்திர எழுத்தர் அலுவலகம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் பக்கத்தில் பத்திர எழுத்தர் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இந்த அலுவலகம் மூடப்பட்டிருந்த நிலையில் மாலை சுமார் 6.30 மணி அளவில் திடிரென அலுவலகத்தில் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதனிடையே, தகவல் அறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீச்சு அடித்து தீயை அனைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை