விநாயகர் கொட்டகை தீப்பிடித்ததால் பரபரப்பு
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்ட கொட்டகை தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முத்தியால்பேட்டை சோலை நகர், சோலையம்மன் கோவில் வீதியில் இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமாக, தெருவில் கீற்று கொட்டகை அமைத்து, விநாயகர் வழிபாடு நேற்று மாலை செய்தனர். அப்போது அப்பகுதி இளைஞர்கள் பட்டாசு வெடித்ததில் பட்டாசு நெருப்பு விநாயகர் அமைக்கப்பட்டுள்ள கீற்று கொட்டகையில் பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், இளைஞர்கள் தண்ணீர் தெளித்து அனைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.