உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீயணைப்புத் துறை ஓட்டுநர் தகுதி தேர்வு

தீயணைப்புத் துறை ஓட்டுநர் தகுதி தேர்வு

புதுச்சேரி : புதுச்சேரியில் தீயணைப்பு வீரர் ஓட்டுநர் பதவிக்கான தகுதி தேர்வு நேற்று துவங்கியது.புதுச்சேரி தீயணைப்புத் துறை கடந்த, 2022ம் ஆண்டு நவம்பரில் ஆட்கள் தேர்விற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இதில் தீயணைப்பு வீரர் ஓட்டுநர் கிரேடு - 111 பதவிக்கான, நேரடி ஆள் சேர்ப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான உடற்தகுதி தேர்வு, கோரிமேடு, போலீஸ் மைதானத்தில் கடந்த பிப்., 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் உடற்தகுதி தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான, ஓட்டுநர் தகுதி தேர்வு, மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் நேற்று துவங்கியது.முதல் கட்டமாக, 45 பேருக்கு தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதையொட்டி, விண்ணப்பதாரர்கள் தகுதி தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வானது வரும், 8ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ எடுக்க எதிர்ப்பு

தகுதி தேர்வு நேற்று வெளிப்படையாகவே நடக்கும் என அரசு சொல்லியது. அதைப்போலவே நேற்றும் தேர்வும் நடந்தது. ஆனால், இதை புகைப்படம் எடுக்க தீயணைப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தீயணைப்புத்றை அதிகாரிகளின், இந்த செயல் தகுதி தேர்வு நேர்மையாக நடக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ