உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

 தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நெட்டப்பாக்கம் லுாகாஸ் டி.வி.எஸ்., தொழிற்சாலையில் நடந்தது. புதுச்சேரி தீயணைப்பு துறை, கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, துணை கோட்ட தீயணைப்பு அதிகாரி சுரேஷ் ஆகியோர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டால், அங்கு பணி புரியும் தொழிலாளர்கள், அதிகாரிகள், எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பிப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தனர். நிறுவன மேலாளர் கணேஷ், மனிதவள மேலாளர் பாஸ்கர், பாதுகாப்பு அதிகாரிகள் கோபிநாத், பிரவின் ஆகியார் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு கருவிகளை கையாள்வது, தீயில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் முதல் உதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு அனுப்புவது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ