உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீன் இறங்கு தளம் பணி; முதல்வர் துவக்கி வைப்பு

மீன் இறங்கு தளம் பணி; முதல்வர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம் : நல்லவாடு மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.அரசு பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் சார்பில், மத்திய அரசு ரூ. 18.94 கோடி மதிப்பில் நிதியுதவியுடன் நல்லவாடு மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக ரூ. 12 கோடியில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதற்கான பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை செயலர் கேசவன், தலைமை பொறியாளர் வீரசெல்வன், மீன்வளத்துறை இயக்குனர் தெய்வசிகாமணி, செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர் கோபி, இளநிலைப் பொறியாளர் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி