மேலும் செய்திகள்
நெல், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
24-Jun-2025
புதுச்சேரி: சிங்காரவேலர் மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளர் சங்கம் சார்பில், மீன் அங்காடி சங்க கிளை திறப்பு விழா இ.சி.ஆர். நவீன சுகாதார மீன் விற்பனை மையத்தில் நடந்தது.சங்கத் தலைவர் ராஜ்குமார், கவுரவத் தலைவர் மல்லிகா, துணை தலைவர்கள் விஜய், சித்தானந்தன், ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.பொருளாளர் ராஜசேகர் வரவேற்றார். துணை செயலாளர் ருமித்ரன், கோவிந்த ராஜ், தெய்வநாயகம், தணிகாசலம், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சி.ஐ.டி.யூ., மாநில தலைவர் பிரபுராஜ், மாநில செயலாளர் சீனுவாசன் ஆகியோர் சங்க கொடியை ஏற்றி வைத்தனர். தமிழ்நாடு மீன் பிடித் தொழிலாளர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் வைத்தியலிங்கம் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
24-Jun-2025