கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
புதுச்சேரி : காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 27ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வரும் 27ம் தேதி தேதியில் இருந்து தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்.ஆகையால், அன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த வானிலை அறிவிப்பு, அவ்வப்பொழுது வெளியிடப்படும்.சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பிற்கு ஏற்ப மாறுபடும் என்பதால் வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.