மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி: ஊர்காவல்படை வீரர் உடற்தகுதி தேர்வு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் ஆய்வு செய்தார்.புதுச்சேரி போலீசில் 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆண்கள் பிரிவில் புதுச்சேரியில் 290, காரைக்காலில் 68, மாகி 37, ஏனாமில் 25 பேரும், பெண்கள் பிரிவில் புதுச்சேரியில் 58, காரைக்காலில் 12, மாகி 9, ஏனாமில் ஒரு இடம் நிரப்பட உள்ளது.இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த அக்., முதல் நவ., மாதம் வரை பெறப்பட்டது. ஆண்கள் பிரிவில் 15,697 பேரும், பெண்கள் பிரிவில் 4,492 பேர் என மொத்தம் 20,189 விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று 1ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் துவங்குகிறது. உடற்தகுதி தேர்வில் முதலில் உடல் எடை, உயரம் சரிபார்த்த பின்பு ஆண்கள் 800 மீட்டர் துாரத்தை 2 நிமிடம் 50 நொடியில் கடக்க வேண்டும். அடுத்ததாக நீளம் தாண்டுதலில் 3.80 மீட்டர், உயரம் தாண்டுதலில் 1.20 மீட்டர் தாண்ட வேண்டும். 100 மீட்டர் ஓட்டத்தை 20 நொடியில் கடக்க வேண்டும்.பெண்கள் 200 மீட்டர் துாரத்தை 45 நொடியிலும், நீளம் தாண்டுதல் 2.75 மீட்டரும், 0.90 மீட்டர் உயரம் தாண்ட வேண்டும். உடற்தகுதி தேர்வு வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. உடற்தகுதி தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, 10ம் வகுப்பு பாடங்கள் அடிப்படையில் 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.இன்று 1 மற்றும் நாளை 2ம் தேதி தலா 500 பேர் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நாள் 3ம் தேதி முதல் தினசரி 12,00 பேர் அழைக்கப்பட்டு உடற்தகுதி தேர்வு நடக்கிறது. உடற்தகுதி தேர்வுக்கான ஏற்பாடுகளை டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் நேற்று ஆய்வு செய்தார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago