உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புனுகு பூனையை கொன்று சாலையில் வீச்சு வில்லியனுாரில் வனத்துறை விசாரணை

புனுகு பூனையை கொன்று சாலையில் வீச்சு வில்லியனுாரில் வனத்துறை விசாரணை

புதுச்சேரி: வில்லியனுாரில் இரண்டு புனுகு பூனைகளை கொன்று சாலையோரம் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த பொறையார் கிராமத்தில் நேற்று முன்தினம் அரியவகை மலபார் புனுகு பூனைகள் இரண்டு சாலையோரம் இறந்து கிடந்தது. இத்தகவல் அறிந்த 'வாய்ஸ் பார் வாய்லெஸ்' என்ற விலங்குகள் நல அமைப்பு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தது.வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் புனுகு பூனையை கொன்று சாலையில் வீசிச் சென்றது தெரியவந்தது.இறப்பிற்கான காரணம் அறிய புனுகு பூனை உடல்களை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.தேசிய விலங்கு நல அமைப்பின் பிரதிநிதி அசோக்ராஜ் கூறுகையில், 'பொதுமக்களுக்கு பிற உயிர்கள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனித வாழக்கை, பிற உயிர்களுக்கு, இயற்கைக்கு கேடு விளைவிப்பதாக இருக்க கூடாது.அப்படி இருந்தால் அதன் பின் விளைவு ஒட்டுமொத்த மனித இனத்திற்கு ஆபத்தாகி விடும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ