ஆரோவில்லில் வளர்ச்சி பணிகள் முன்னாள் தலைவர் ஆய்வு
வானுார்: ஆரோவில் அறக்கட்டளை முன்னாள் தலைவர் கரண்சிங், ஆரோவில்லில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். சர்வதேச நகரமான ஆரோவில் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராக இருந்தவர் கரண்சிங். இவர், ஆரோவில் பகுதிக்கு வருகை புரிந்து, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். குறிப்பாக கிரவுன் சாலை திட்டம் மாத்ரி மந்திர் ஏரி அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, மாத்ரி மந்திர் நிர்வாகி ஜூடித், ஆரோவில் நகர வளர்ச்சி கவுன்சில் ஜெயா, அறக்கட்டளை சிறப்பு அதிகாரி சீத்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் ஆரோவில் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஜெயந்தி ரவியை பாராட்டினார்.