உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியிடம் ரூ.29 லட்சம் மோசடி மாஜி அரசு ஊழியருக்கு வலை

மூதாட்டியிடம் ரூ.29 லட்சம் மோசடி மாஜி அரசு ஊழியருக்கு வலை

புதுச்சேரி: மூதாட்டியிடம் கடனாக ரூ. 29 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற பெண் அரசு ஊழியர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை, புதுபேட் அண்ணா தெருவை சேர்ந்தவர் பார்வதி, 65. இவரிடம், லாஸ்பேட்டை, ராஜாஜி நகர், 7 வது குறுக்கு தெருவை சேர்ந்த பண்டோரிபாய், கடந்த 2020ம் ஆண்டு அறிமுகமாகி, தான் அரசு பணியில் இருப்பதாகவும், துணிக்கடை துவங்குவதற்கும், மகள் திருமணத்திற்கும் கடனாக பணம் கேட்டுள்ளார். மேலும், பணி ஓய்வின்போது வரும் தொகையை கொண்டு பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக நம்பிக்கை அளித்துள்ளார். இதைநம்பிய, பார்வதி பல்வேறு தவணைகளாக 29 லட்சம் ரூபாயை பண்டோரிபாயிடம் வழங்கி உள்ளார். இதற்கிடையே, பண்டோரிபாய் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக, விருப்ப ஓய்வு பெற்று விட்டார். ஆனால், அதன் மூலம் வந்த பணத்தை, பார்வதிக்கு கொடுக்காமல், அலைக்கழித்து வந்தார். இதுகுறித்து பார்வதி அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் பண்டோரிபாய் மீது வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை