உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சோலை நகர் மீனவ பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு 

சோலை நகர் மீனவ பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு 

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சோலை நகரில் ஏற்பட்டு வரும் கடலரிப்பை முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் பார்வையிட்டு, மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார்.பெஞ்சல் புயலால், கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக, புதுச்சேரி சோலை நகர் மீனவர்கள் தங்கள் படகுகளையும் மீன் பிடி உபகரணங்களையும் பாதுகாப்பாக வைக்க இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.இவர்கள், தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணனை சந்தித்து மீன்பிடி படகுகள், மீன்பிடி சாதனங்களை வைக்க இடம் தயார் செய்து கொடுக்கவும், கடலரிப்பை தடுக்க துாண்டில் முள் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து அவர் நேற்று சோலை நகரில் மீனவர்களுடன் சென்று கடலரிப்பு பகுதியை பார்வையிட்டார். அப்பொழுது மீனவர்கள் கூறிய துாண்டில் முள் வளைவு கோரிக்கை எதிர்க்கட்சி தலைவர் சிவாவிடம் தெரிவித்து இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை