உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடைக்கால பட்ஜெட் அரசின் கடன் சுமையை உயர்த்தும் மாஜி எம்.பி., ராமதாஸ் கருத்து

இடைக்கால பட்ஜெட் அரசின் கடன் சுமையை உயர்த்தும் மாஜி எம்.பி., ராமதாஸ் கருத்து

புதுச்சேரி :இடைக்கால பட்ஜெட் அரசின் பற்றாக்குறையையும் கடன் சுமையையும் உயர்த்தும் என முன்னாள் எம்.பி., ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் மற்ற மாநிலங்கள் கூட இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்கின்றன என்று சபாநாயகர் கூறுகிறார். ஆனால் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஏன் உலகில் எந்த நாட்டிலும் 13 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்து வளர்ச்சியைக்குறைத்த மாநிலம் புதுச்சேரியைத் தவிர வேறு எந்த அரசும் இல்லை. இந்த 12 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்த பெருமை ரங்கசாமி அரசுக்கு உண்டு.தேர்தலை மனதில் கொண்டுள்ள ஒரு அரசு மானியம், இலவசம், நிவாரணம் போன்ற இனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்கும். ரங்கசாமி மீண்டும் மீண்டும் தன்னை ஒரு சாதாரண அரசியல்வாதியாகதான் காட்டிக் கொள்ளுகிறாரே தவிர ஒரு தலைவராக அல்ல. ஒரு இடைக்கால பட்ஜெட் செலவு பட்ஜெட்டாக இருந்து அரசின் பற்றாக்குறையையும் கடன் சுமையையும் உயர்த்தும்.ஒரு ஆண்டிற்கான முழு பட்ஜெட்டையும் சமர்ப்பிக்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் நான்கு மாதங்களுக்கான அரசின் செலவுக்கு ஒப்புதல் பெற இருப்பது அரசின் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ