உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கண்டமங்கலம் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

 கண்டமங்கலம் அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் பிரியதர்ஷினிமுருகன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சேவியர் செந்தில்குமார் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் 250 பேருக்கு ரூ.11.64 லட்சம் செலவில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கண்டமங்கலம் மத்திய ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சீனுசெல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதிசுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி