உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் இலவச கண் பரிசோதனை முகாம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் இலவச கண் பரிசோதனை முகாம்

புதுச்சேரி : பஞ்சவடியில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் புதுச்சேரி போர்ட் ரோட்டரி கிளப் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று, பஞ்சவடீ, ஆஞ்சநேய சுவாமி கோவில் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.காலை, 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடந்த முகாமில், புதுச்சேரியை சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அமலராஜ், சுகந்தி தலைமையிலான குழுவினர், முகாமில் பங்கேற்ற 150 பேரின் கண்களை பரிசோதித்தனர். அவர்களில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.இந்த பரிசோதனைக்கு பிறகு கண் நோய் உள்ளவர்களுக்கு, சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. கண்ணாடி பரிந்துரைக்கப்பட்ட 50 நபர்களுக்கு ஒரு வாரத்தில் கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட உள்ளது.கண்களில் வேறு குறைபாடுகள் உள்ளவர்களை, மறு பரிசோதனைக்காக, கண் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை