உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சு மொழி நாள் விழா 

பிரெஞ்சு மொழி நாள் விழா 

புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி, பிரெஞ்சு துறை சார்பில் உலக பிரெஞ்சு மொழி நாள் விழா நடந்தது. விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். தனியார் நிறுவன இயக்குநர் அருண்குமார் சாந்தலிங்கம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். பிரெஞ்சு துறை தலைவர் சரவணன், பிரெஞ்சு மொழி நாளின் அவசியம் மற்றும் சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். பேராசிரியர் நித்யா நன்றி கூறினார்.விழாவில், திரளான மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேராசிரியர் சரவணன் மற்றும் மாணவியர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !