உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்வரி வசூல் மையத்திற்கு வந்த சோதனை அடிக்கடி பவர் கட்டால் பொதுமக்கள் பாதிப்பு

மின்வரி வசூல் மையத்திற்கு வந்த சோதனை அடிக்கடி பவர் கட்டால் பொதுமக்கள் பாதிப்பு

புதுச்சேரி: வில்லியனுார் மின்வரி வசூல் மையத்தில் யு.பி.எஸ்., பழுதாகியுள்ளதால் வரி வசூலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வில்லியனுார் தெற்கு மாட வீதியில் மின் கட்டண வரி வசூல் மையம் அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மின் கட்டண வசூல் மையத்தில் யு.பி.எஸ்., செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. பொதுமக்கள் மின்தடை நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ok49wysu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பவர் கட் ஆயிடுச்சு; யு.பி.எஸ்., இல்லை, ஒன்றும் செய்ய முடியாது. கரண்ட் வரும்போது வாங்க என்று மின் துறை ஊழியர்கள் பணத்துடன் வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக வில்லியனுாரில் மின் கட்டணம் வசூல் மையம் பெரிய வசதியாக உள்ளது. நேரடியாகவே மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் காலை நேரத்தில் மின்தடை அடிக்கடி ஏற்படுவதால் மின்சார வரி கட்ட முடியாமல் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். யு.பி.எஸ்., செயல்படாமல் உள்ளது குறித்து மின்துறை உதவிப்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளரிடம் கடந்த மாதம் தெரிவித்தாகிவிட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. லட்சக்கணக்கில் மின்சார வரி வசூல் செய்யும் மையத்தில், இதுபோன்று யு.பி.எஸ்., செயல்படாமல் இருந்தால் எப்படி மின்துறை லாபத்தில் இயங்கும். பொதுமக்கள் பணம் கட்ட வரும்போது அதனை வசூலிக்கும் வகையில் முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா. சில ஆயிரம் சம்பாதிக்கும் தள்ளுவண்டி கடையில் யு.பி.எஸ்., வந்துவிட்டது. லட்சக்கணக்கில் வரி வசூல் செய்யும் மின் துறை வரி வசூல் மையத்தில் அலட்சியம் காட்டுவது வேதனையா உள்ளது. மின் துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து பழுது ஏற்பட்ட யு.பி.எஸ்., யை உடனடியாக மாற்றியமைக்க நடவடிக்கை வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை