உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஊசுடு தொகுதியில் காங்., பாதயாத்திரை

 ஊசுடு தொகுதியில் காங்., பாதயாத்திரை

வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் காங்., சார்பில் நேற்று மாலை பாதயாத்திரை நடந்தது. புதுச்சேரி காங்., கட்சியினர் வரும் சட்டசபை தேர்த்தலுக்கன பிரசாரத்தை துவங்கும் வகையில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்தும், ஊழலை மக்களுக்கு விளக்கும் வகையில் தொகுதி தோறும் பாதயாத்திரை பிரசாரம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் துவங்கிய பாதயாத்திரையில் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், ஊசுடு வட்டார காங்., நிர்வாகிகள் பாபு, ராமு, செந்தில்குமார், லோகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !