மேலும் செய்திகள்
நிலத்தகராறில் ஒருவர் தாக்குதல் 10 பேருக்கு வலை
03-Sep-2025
வில்லியனுார்:கொலை வழக்கில் தம்பி தலைமறைவானதால், அவரது அண்ணனை கொலை செய்த கும்பலை போலீசார் தேடுகின்றனர். புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த உறுவையாறு பேட்டையைச் சேர்ந்தவர் சவுந்தர், 30; டிரைவர். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில், அவரது மாமியார் வீடான தட்டாஞ்சாவடி அருகே மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். வில்லியனுார் போலீசார், சவுந்தரின் உடலை மீட்டு விசாரித்தனர். அதில், 2024 ஜன., 13 இரவு, வில்லியனுாரில் ரவுடி தனபாலை நான்கு பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சவுந்தரின் தம்பி ரவுடி ஜீவா,ஞானபிரகாசம், சந்துரு உட்பட நான்கு பேர்சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமினில் வந்த ஜீவா, தலைமறைவாக உள்ளார். தனபாலின் கூட்டாளிகள், ஜீவாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சவுந்தரை படுகொலை செய்தது தெரிய வந்து உள்ளது. வில்லியனுார் போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
03-Sep-2025