உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கோட்டக்குப்பம் : தனியார் ஓட்டலில் பிறந்த நாள் விழா கொண்டாடிய சிறுமி, நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுஷாந்த் தோபால். இவரது மனைவி ஸ்ரிமிதி நொய்வால் தோபால். இவர்களின் மகன் பர்ஜன்யா, 10; மகள் தேவி பர்னிக்கா, 5. இவர்கள் சுற்றுலாவாக கடந்த 26ம் தேதி புதுச்சேரிக்கு வந்தவர்கள், கோட்டக்குப்பம் அடுத்த இ.சி.ஆரில் உள்ள ஓசன் ஸ்ப்ரே ஓட்டலில் தங்கினர்.சிறுமி தேவி பரணிக்காவிற்கு நேற்று பிறந்த நாளை கொண்டாடினர். மாலை 4;30 மணிக்கு, தந்தையும், மகனும் பெரியவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர். சிறுவர்களுக்கான நீச்சல் குளம் அருகில் ஸ்மிருதி நொய்வால் தோபால் தனது மகளுடன் அமர்ந்திருந்தார். பின்னர் இருவரும் அறைக்கு சென்றுவிட்டனர்.அறையில் இருந்த சிறுமி தேவி பர்னிக்கா மீண்டும் நீச்சல் குளம் பகுதிக்கு வந்தபோது, தவறி நீச்சல் குளத்தில் விழுந்தார். உடன், அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுமியை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை