சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது
அரியாங்குப்பம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, போக்சோ வழக்கில் போலீசார்கைது செய்து, சிறையில் அடைத்தனர்.புதுச்சேரியை சேர்ந்த 38 வயது நபர், தனது மனைவியை விட்டு பிரிந்து, பிளஸ் 2 படிக்கும் தனது 17 வயது மகளுடன் வசிக்கிறார். மது போதையில், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நடந்த சம்பவத்தை, அச்சிறுமி தனது தாயிடம் கூறினார்.இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார், போக்சோ - 8 மற்றும் 12 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, சிறுமியின் தந்தையை, போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.