அரசு கல்லுாரி பேராசிரியர்கள் போராட்டம் அமைச்சர் பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு
புதுச்சேரி: நிலுவை தொகையுடன் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு கல்லுாரி பேராசிரியர்களின் கூட்டு போராட்டக்குழுவிடம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, உள்ளிருப்பு பேராட்டம் தற்கலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரி அரசு கல்லுாரி பேராசிரியர்களின் கூட்டு போராட்டக்குழு நிலுவைத் தொகையுடன் பதவி உயர்வு வழங்க வேண்டி கடந்த 14 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து அவர்களுடன் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுபுதுச்சேரி அரசு பேராசியர்களின் பதவி உயர்வு, ஊதிய நிலுவைத் தொகைபாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2ம் தேதி வெளியிட்ட அரசு ஆணையை திரும்ப பெற வேண்டும். அதுபோல் தங்களை இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும். அடிப்படை ஊதியம் 7 ஆயிரத்தில் இருந்து, 8 ஆயிரம் எனவும், 8 ஆயிரத்தில் 9 ஆயிரம் எனவும் குறிப்பிட்ட காலங்களில் உயர்த்தி வழங்க வேண்டும் என, பல்கலைக்கழக விதிமுறைகளை சுட்டிக்காட்டி,அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து முதல்வர், உயரதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்தார். இதையேற்று கடந்த 14 நாட்களாக நீடித்து வந்த கல்லுாரி பேராசிரியர்களின் உள்ளிருப்பு பேராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி கல்லுாரி பேராசிரியர்களின் கூட்டு பேராட்டக்குழு தலைவர் கன்வீர் பாலமுருகன், இணை கன்வீர் ஜானகிராமன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.